• 0452 4200664
  • No.30 Navalar Nagar, 1st Street, Madurai- 625 016

Prayer And Finance

ஜெபம் அதனுடைய ஆசனத்திலிருந்து ஆட்சி செய்யுமானால் நிச்சயம் எல்லாத் தடைகளையும் அது உடைத்தெறியும். அந்த நாட்களில் ஜெபம் ஆளுகை செய்ததுபோல, இப்பொழுது மீண்டும் ஜெபம் தனது இடத்தை நமது ஸ்தாபனத்தில் பிடித்திருக்கின்றது. ஜெயமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜெபம் தனது ஆசனத்தில் ஏறியிருக்கின்றது. ஆகையால் எழுப்புதல் ஆரம்பித்திருக்கின்றது. அன்பானப் போதகர்களே, ஜெபத்தை மட்டும் தூக்கிப்பிடியுங்கள், மற்ற பிரச்சனைகளை விட்டுவிட்டு எல்லாரும் ஜெபத்தில் இணையுங்கள். இப்பொழுது ஐம்பது சதவீதம் போதகர்களே ஜெபத்தில் இணைந்திருக்கிறார்கள். ஏனைய போதகர்களே! ஜெபம் ஜெயிக்கும், உங்களை ஜெபிக்க வைக்கும், பதரை எல்லாம் ஜெபத்தில் போடுங்கள் சாம்பலாக்கிவிடும்.

The Significance of Corporate Worship in the Church

ஆராதனை (Worship) என்கிற வார்த்தை, திருச்சபைகளிலும், கிறிஸ்துவ வட்டாரங்களிலும் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற வார்த்தை. இது துதி ஆராதனை (Praise and Worship), சபை ஆராதனை (Church Service) போன்ற சில அர்த்தங்களிலும் கிறிஸ்தவர்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. Worship என்ற ஆங்கில வார்த்தைக்கு ஆராதனை என்றோ வழிபாடு என்றோ தொழுகை என்றோ பொருள் கொள்ளலாம். நல்ல இசையுடனும், நல்ல பாடல்களுடனும் கர்த்தரை புகழ்ந்துபாடுவதுதான் ஆராதனை என்று கருதுபவர்கள் அநேகர் உண்டு. ஆனால், இது ஆராதனையின் ஒரு பகுதி மட்டுமே. இதைத்தான் போதகர் ரிக் வாரன் தன்னுடைய நூலில் (The Purpose Driven Life) ஆராதனை என்பது பாடலோ அல்லது இசையோ அல்ல அவைகளை எல்லாம் கடந்தது என்பதனை விளக்குகிறார்.

2025 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps.com