துர்உபதேசம் என்பது சரியான உபதேசத்திற்கு நேர்மாற்று கருத்து ஆகும். கிறிஸ்துவ உலகில் இறையியலில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகள் (False teaching, cult) துர் உபதேசம்.
துர்உபதேச குழுக்களை மூன்றுவிதமாக பிரிக்கலாம்:
வழிபாட்டு மரபு முறை (Cult):
Cult என்பது ஆதி அப்போஸ்தலர்களின் உபதேசத்தை மறுதலித்து, வேதாகமத்தின் அடிப்படையிலான கிறிஸ்தவ உபதேசங்களை திரித்து அல்லது தவறான விதத்தில் போதிப்பது ஆகும். Cult என்பது "Cultus" என்ற லத்தின் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இந்த வார்த்தை ஒரு சமயத்தின் மரபுகள், உணர்வுகள், சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைமைகளை குறிக்கும் வார்த்தையாகும்.
துர்உபதேசங்களின் சிறப்பியல்பு அம்சங்கள் - The Characteristics of the Cult :
● சர்வதிகார தலைமை : (Authoritarian Leadership): தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் உபதேசங்கள்மீதும், வழிபாட்டு முறைகள் மீதும் முழு அதிகாரம் செலுத்துபவர்களாய் இருப்பார்கள். இவர்கள் போதிக்கும் அனைத்து கருத்துகளும், உபதேசங்களும் மற்ற அனைவராலும் எவ்வித கேள்விகளும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இவர்கள் அப்போஸ்தலர்கள் (Apostle), பூரணமான குரு (Perfect Master), பிரபஞ்சங்களின் அன்னை (Mother of the Universe) போன்ற சிறப்பு பெயர்களை தங்களுக்கு கொடுத்துக்கொள்கின்றனர்.
● பிரத்யேகத்தன்மை: (Exclusivistic): நூதனமான உபதேசங்களை பரப்பும் இவர்களை பொறுத்தவரை இவர்கள் மட்டுமே இந்த உலகில் சத்தியத்தை முழுமையாகவும், பிரத்யேகமாகவும் பின்பற்றுபவர்கள். எனவே மீட்பு (அ) இரட்சிப்பு என்பது இவர்களுக்கும், இவர்களை பின்பற்றுபவர்களுக்கும் மட்டுமே கிடைக்கும்.
● அனுமதியை சார்ந்திருத்தல்: (Sanction Oriented): அனைத்து துர்உபதேச குழுவினருக்கும் அவரவர்களுக்கென்று நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட விதிமுறைகளும், வரையறைகளும் உள்ளன. குழுவின் எல்லா உறுப்பினர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். எல்லோரிடமும் நேர்மை எதிர்பார்க்கபடுகிறது.
● மறைமுகத்தன்மை மற்றும் இரகசிய வாக்குறுதி: (Esoteric & Oath of Secrecy): இந்த உபதேச குழுக்களின் போதனைகள் அனைத்தும் மக்களின் அனுபவங்களை சார்ந்தே அமைகிறது. பகுத்தறிவை சார்ந்து அமைவதில்லை. எனவே இந்த குழுக்களை பின்பற்றும் மக்கள் இவர்களின் உபதேசங்களை பரிசோதித்து, ஆராய்ந்து பார்க்க முடியாமல் போகிறது.
● புனிதத்துவத்திற்கு எதிரான நிலை: (Anti-Sacredotal): பாமர மக்கள் சார்ந்ததாக அமைகிறது. ஆனால் தலைமைத்துவத்தில் புனித குருமார்கள் மட்டுமே இருப்பார்கள். எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
நவீன காலத்தில் செயல்படும் சில துர்உபதேச குழுக்களை நாம் பார்க்கலாம்…..
.
● மோர்மோனிசம் MORMONISM (Latter Day Saints): Joseph Smith, Jr. (1805-1844). ஜோசப் ஸ்மித், 1830 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள இயேசு கிறிஸ்துவின் பிந்தைய நாள் புனிதர்களின் (Latter Day Saints) தேவாலயத்தை நிறுவினார்.
● யெகோவாவின் சாட்சிகள் JEHOVAH'S WITNESSES: சார்லஸ் டாஸ் ரசல் (Charles Taze Russell 1852-1916). பென்னிஸ்வேனியாவில் 1879 இல் தொடங்கப்பட்டது.
● கிறிஸ்துவ அறிவியல் CHRISTIAN SCIENCE: மேரி பேக்கர் எடி (Mary Baker Eddy) இல் கிறிஸ்டியன் சயின்ஸ் என்ற புதிய குழுவினை ஏற்படுத்தினார்.
● அதீத கிருபை HYPER GRACE: மனந்திரும்புதல் மற்றும் பாவ அறிக்கை போன்ற பிற முக்கிய போதனைகளைத் தவிர்த்து கடவுளின் கிருபையை வலியுறுத்தும் ஒரு புதிய வகையான போதனையை விவரிக்க ஹைப்பர்-கிரேஸ் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு விசுவாசியின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய அனைத்த காலங்களுக்குமான பாவங்களும் ஏற்கனவே மன்னிக்கப்பட்டுவிட்டன எனவே அதை ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஹைப்பர் கிரேஸ் போதனையாளர்கள் கூறுகின்றனர். பாவங்களுக்கு எதிராக கண்டித்து உணர்த்தும் பிரசங்கங்களை இக்குழுவின் போதகர்கள் ஒருநாளும் செய்வதில்லை. HYPER GRACE போதனையாளர்கள் பழைய ஏற்பாட்டு போதனைகளை, சத்தியங்களை முழுவதும் தவிர்க்கின்றனர். ஹைப்பர் கிரேஸ் தேவாலயங்களில் கலந்துகொள்பவர்கள் ஆரோக்கியம், செல்வம், செழிப்பு மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெறுவது போன்ற ஊக்கமளிக்கும் செய்திகளை மட்டுமே கேட்கிறார்கள்.
மாறுபாடுள்ள உபதேச குழுவினரை எதிர்கொள்வது எப்படி?
கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.(1 பேதுரு 3:15)
● கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்: அர்ப்பணம் உள்ள கிறிஸ்தவ வாழ்க்கை நமக்கு தேவை அந்தரங்கமாகவும், வெளியரங்கமாகவும் சாட்சியுள்ள வாழ்க்கையை நாம் வாழ வேண்டும்.
● எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்: கிறிஸ்தவ விசுவாசத்தை கேட்கிறவர்களுக்கு உடனடியாக வேத வசனத்தின் அடிப்படையில் சொல்லும் அளவுக்கு நாம் நம்முடைய வேத அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
● உத்தரவு சொல்ல: உத்தரவு சொல்லுவது நம்முடைய பணி ஆனால் மன மாற்றத்தை (Conviction) கொண்டுவருவது நம்முடைய பணி அல்ல. அதை செய்யக்கூடியவர் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே. அவரையும் அவருடைய வல்லமையும் எப்போதும் சார்ந்து கொள்ள வேண்டும்.
● உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும்: ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது மக்கள் கூட்டத்தையோ சந்தித்து நற்செய்தியை அறிவிக்கும் முன்பதாக அந்த இடத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும் பொதுவான மனிதர்களுடைய குணாதிசயங்களைப் பற்றியும் நாம் கற்று அறிந்திருக்க வேண்டும்.
● உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து: நம்முடைய சாட்சிகளின் (Personal Testimony) மூலமாக நம்முடைய கிறிஸ்துவ நம்பிக்கையை நம்மால் இன்னும் ஆழமாக வெளிக்கொணர முடியும். நமக்குள் இருக்கும் விசுவாசமே கிறிஸ்துவின் மீதான நம்முடைய அன்பு, தாகம் இவற்றிற்கான ஆதாரம்.
● சாந்தத்தோடும் வணக்கத்தோடும்: சாந்தத்தோடும் வணக்கத்தோடும் என்று சொல்லும் போது பொறுமையோடு அன்போடும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று அர்த்தம். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் (Heated Debate) இறங்கி விடக்கூடாது இப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது பொறுமையோடு அதை கையாளவோ அல்லது தவிர்க்கவோ முயற்சிக்க வேண்டும்.
வேத வசனத்தை உங்களுடைய அதிகாரபூர்வ ஆதாரமாக வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதில் எப்போதும் வேத வசனத்தை அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும். சரியான வேதாகம மொழிபெயர்ப்புகளை பயன்படுத்துங்கள். எதிர் தரப்பினரால் நமக்குள் ஏற்படும் குழப்பத்திற்கும் கேள்விகளுக்கும் வேதவசனமே சரியான தீர்வு.