1960-ம் அண்டு முதல் நமது தமிழ் பிரதேசத்தில் பரிபூரண ஜீவன் பத்திரிக்கை ஊழியம் நடைபெற்று வருகிறது. "The Abundant Life”என்ற ஆங்கில பத்திரிக்கையை Rev. Dr. Y. ஜெயராஜ் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து முதலில் வெளியிட்டு வந்தார்கள். பல ஆண்டுகள் Rev. Dr. Y. ஜெயராஜ் அவர்களும், அதைத் தொடர்ந்து Rev.I. அலெக்ஸாண்டர், Rev.J.J. செல்வின் வில்சன் அவர்களும் பொறுப்பு வகித்து சிறப்பாக இந்த பத்திரிக்கை ஊழியத்தை நடத்திவந்தனர். தற்பொழுது Rev.Dr. .ஜெரி டேனியல் அவர்கள் பத்திரிக்கையின் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.
கர்த்தருடைய பெரிதான கிருபையால் பரிபூரண ஜீவன் பத்திரிகை அநேக தேவ ஊழியர்களுக்கும் விசுவாச குடும்பத்தினருக்கும் கடந்த 63 ஆண்டுகளாக மிகவும் ஆசீர்வாதமாக இருந்து வருகிறது. நமது பிரதேசத்திலுள்ள விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும், நமது பிரதேசத்தில் நடைபெறும் ஊழியங்களை குறித்த தகவல்களை அவ்வப்போது அறிந்து கொள்ளவும் நமது பத்திரிக்கை உதவியாய் இருக்கிறது. தற்போது 13 ஆயிரம் பத்திரிகைகள் அச்சிடப்படுகிறது. நமது பத்திரிக்கையை நமது ஸ்தாபனத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் மற்ற அனேகரும் வாசித்துப் பயன்பட்டு வருகிறார்கள். பலர் அவ்வப்போது தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் தாங்கள் பத்திரிக்கை மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை சாட்சியாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.