கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பாக தேவனுடைய வழிநடத்துதலின்படி தேவசங்க சபைகளின் அகில உலக தலைவர்Rev. Dr. D. மோகன், AGWM Rev.. மாற்கு டேனியேல் தற்போதைய SIAG தலைவர் Rev. A. ஆபிரகாம் தாமஸ் மற்றும் CMS தலைவர் Sis. சாபியா மிரீஸா இவர்கள் மூலமாக இந்தியா முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட இந்த அயலகத்தாருக்கான ஊழியம் இன்றைக்கு தமிழ்பிரதேசத்தில் தேவகிருபையால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
AG வேதாகமக் கல்லூரிகளிலும் நம்முடைய பிரதேச மாநாடுகளிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை களிலும் ஜூம்மா ஜெபம் என்ற பெயரில் இஸ்லாமியருக்காக ஜெபிக்கும்படி பாரம் கொடுத்து உற்சாகப்படுத்தியதால் அநேக சபைகளில் இந்த ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா முழுவதும் 30 நாட்கள் ரமலான் மாதத்தில் இஸ்லாமியருக்காக ஜெபிக்க ஜெபக்குறிப்புகளை அனுப்பி பிரதேச தலைவர்கள் முயற்சி எடுத்தார்கள். இந்த 30 நாட்கள் ஜெபம் ஆரம்பிப்பதற்கு முந்தைய ஞாயிறு ஆராதனைகளில் சில நிமிட நேரம் ஒதுக்கி இந்த ஜெபத்தின் அவசியத்தை குறித்து உணர்த்தி சபையார் ஜெபிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.
ஆரம்ப நாட்களில் இந்த ஊழியத்தின் பொறுப்பாளர்களாக செயல்பட்டவர்கள்: Rev. ஹட்சன் டெய்லர். அடையார்AG சபை போதகர் Rev. சாமுவேல் ராஜ், Rev. ஸ்டான்லி ஜாக்சன் இவர்கள் வேதாகமக் கல்லூரிகளிலும் பல சபைகளிலும் கருத்தரங்கு கூட்டங்கள் மூலமாக அநேக விசுவாசிகள் இந்த ஊழியத்தில் இணைந்துக் கொள்ளவும். இஸ்லாமியர் நடுவில் ஊழியம் செய்யவும் அநேகரை உற்சாகப்படுத்தினார்கள். வட இந்தியாவிலிருந்து ளுளை. சாபியா மிர்ஸா மூலமாக அனுப்பப்பட்ட Rev. அவி ஆஞ்சு அவர்கள் சென்னை புதுவாழ்வு சபையின் பாஸ்டர் ஆலன் ஜான் அவர்களோடு இணைந்து பல சபைகளுக்கும் வேதாகம் கல்லூரிகளுக்கும் சென்று ஊழியம் செய்து அநேகரை இந்த ஊழியத்திற்கு ஆயத்தப்படுத்தினார்கள்.
Rev. ஸ்டான்லி ஜாக்சன் அவர்கள் மூலமாக எல்லா பிரதேச தலைவர்களின் உதவியுடன் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் மூலமாக 30 நாட்களுக்கானஜெபக்குறிப்புகள் சபைகளை சென்றடைய பெரும் முயற்சியெடுத்தார்கள்.
இதை தொடர்ந்து Rev. ஜேக்கப் இஸ்ரேல், Rev. பாக்கியராஜ். Rev. ஆலன் ஜான் ஆகியோர் மூலமாக இன்றைக்கு இருக்கும் அனைத்து மண்டலங்களுக்கும் பொறுப்பாளர்களை ஆயத்தப்படுத்தி இந்த ஊழியம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. Rev. ஜேக்கப் இஸ்ரேல் அவர்கள் ஒவ்வொரு வாரமும் இஸ்லாமியருக்காக ஜெபிக்க வாட்ஸ்அப் மூலமாக ஜெபக்குறிப்புகளை ஆயத்தப்படுத்தி அனுப்பி வருகிறார். Goodle Meet மூலமாக பொறுப்பாளர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இணைந்து ஜெபித்து வருகிறார்கள்.
Rev.T.C. நாதன் (நாமக்கல்). Rev. ஆல்வின்(பாளையங்கோட்டை), Rev. அம்புரோஸ் (செங்கல்பட்டு) ஆகியோர் மூலமாக இந்த மூன்று இடங்களிலும் இந்த வருடத்திற்கான 30 நாட்கள் ஜெபக்கையேடுகளை விநியோகிக்க மண்டல பொறுப்பாளர்கள் ஒன்றுக்கூடி ஜெபத்துடன் ஆயிரக்கணக்கான ஜெபக்கையேடுகளை எடுத்துச் செல்ல திட்டமிட்டார்கள். Rev. ஜேக்கப் இஸ்ரேல், Rev. பாக்கியராஜ் இவர்கள் இருவரும் இணைந்து இதை மிக சிறப்பாகச் செய்ய ஆண்டவர் கிருபை செய்தார்.
இன்றைய தமிழ்பிரதேச நிர்வாகக் குழுவினரும் இந்த ஊழியத்தை மிகுந்த ஜெபத்துடன் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். அநேகருடைய ஜெபங்களினால் நமது தமிழ்பிரதேசம் முழுவதும் 161-க்கும் அதிகமானோர் தொடர்ந்து ஆலயத்திற்கு வருகிற சாட்சிகள் வந்தவண்ணமாக இருக்கிறது.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக!