சங்கை Dr. Y. ஜெயராஜ் அவர்கள் நமது A.G. ஸ்தாபனத்தின் தலைவராக பொறுப்பில் இருந்த போது, சுமார் 1971-ல், ஸ்தாபனத்தின் பொருளாதாரக் குறைவுகளை சீர்படுத்தவும், பிரச்சனைகள் ஏற்படும் போது ஒன்று கூடி ஜெபிக்கவும், கிராமங்கள் தோறும் சுவிசேஷம் அறிவித்து சபைகளை ஸ்தாபிக்கவும், சபைகள் வளர்ச்சி அடையவும், ஆண்கள் ஐக்கிய அவசியத்தை வலியுறுத்தினார். அந்நாட்களில் 'மினிட்ஸ் மென்ஸ் கிளப் (Minutes Mens Club) என்று ஆண்கள் ஐக்கியம் அழைக்கப் பட்டது. தொடர்ந்து பின்வரும் காலங்களில் இந்த ஐக்கியத்தை ஒரு இலாக்காவாக செயல்படுத்த, 'ஆண்கள் ஐக்கியம்' என்ற புது பொலிவோடு தமிழ் பிரதேச நிர்வாக குழு சங்கை P.S. ராஜாமணி அவர்கள் தலைமையில் தீர்மானிக்கபட்டது. 2005ம் ஆண்டில் சங்கை. கிளாரன்ஸ் மருதையா தலைமையில், சங்கை. கிறிஸ்துதாஸ், சங்கை. ஜோசுவா மாசிலாமணி, சங்கை. V.S. சாமுவேல் ராஜ் போன்ற மூத்த போதகர்கள் ஆண்கள் ஐக்கிய நிர்வாக குழுவில் செயல்பட்டார்கள்.
வளர்ச்சி:
ஆண்கள் ஐக்கிய நிர்வாக குழுவின் சிறப்பான பணியினால் மண்டல அளவிலும் இக்கூடுகையை நடத்த, ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து உற்சாகபடுத்தப்பட்டு முறைபடுத்தப்பட்டது. இதனுடைய பலனாக மத்திய ஆண்கள் ஐக்கிய முகாம் என்று 2010-សំ ஆரம்பிக்கப்பட்டது. மேலும் ஆண்கள் ஐக்கியம் மிஷன் இலாக்காவோடு இணைந்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமான தொகையை உதவும் கரமாக நீட்டியது குறிப்பிடத்தக்கது.
அற்பமான ஆரம்பமாய் ஆண்கள் ஊழியத்தை வித்திட்ட தேவன் விழுதுவிடும் ஆலமரம் போல் வளர இம்மட்டும் கர்த்தர் உதவி செய்தார். 2023ம் ஆண்டு முதல் தமிழ் பிரதேசத்தில் மாத்திரமே செயல்பட்டு வந்த ஆண்கள் ஐக்கியம் தற்பொழுது தென்னிந்திய தேவ சங்க சபைகளுக்கும் மாதிரியாய் விளங்கவும், ஆண்கள் ஐக்கியங்களை ஆரம்பிக்கவும், சங்கை. Dr. ஆலன் பிராஸ்பர் தலைமையின் கீழ் வேகம் பெற்று வருகிறது.