மிஷனெரிகள் மேரி சாப்மேன், C.S.ஈ.டி. டாரீஸ் எட்வர்ட்ஸ் போன்றோர்கள் தமிழ் பிரதேசத்தில் வந்து சபைகளை ஸ்தாபித்தனர். மேலும் 1993-សំ பெண்களுக்கான திரித்துவ வேதாகம கல்லூரியை நிறுவினதில் கொலின் குயின் அம்மையாரின் பங்கு அதிகம். இவ்விதம் பெண் மிஷனெரிகள் மூலம் அநேக ஊழியங்கள் நடைபெற்றாலும், தமிழ் பிரதேச பெண்களுக்கு ஊழிய எழுற்சி 2004ம் ஆண்டு சகோதரி டெர்ரி அவர்களின் முயற்சியின் மூலம் கிடைத்தது.
அதே ஆண்டில் பெண்களுக்கான முதல் தேசிய மாநாடு நடைபெற்றது. அகில இந்திய தேவசங்க சபை பெண்கள் ஊழியத்தின் தலைவியாக திருமதி. கெத்சியாள் மோகன் அவர்களும், அவர்களுடன் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள திருமதி. வசந்தா இராஜாமணி மற்றும் டாக்டர். ராணி ஜெயச்சந்திரன் அவர்களும் நியமிக்கப்பட்டனர். தற்போது சகோதரி. நிர்மலா ஜெயராஜ் அவர்களும், டாக்டர். ராணி ஜெயச்சந்திரன் அவர்களும் உடன் பொறுப்பு வகிக்கின்றார்கள்.
இத்தலைமையின் கீழ் பல மண்டலத் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் அமைக்கப்பட்டு ஊழியம் தொடரப்பட்டது. இந்தியாவின் பல மாநிலங்களிலும், ஊழியர் மனைவிகளின் மாநாடுகள் நடத்தப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டனர்.
பெண்ணே, உனக்காக (Women in focus) என்ற மாதாந்திர பத்திரக்கையும் சில காலம் நடத்தப்பட்டது. முகநூல் (Facebook) ஊழியம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழ் பிரதேச பெண்கள் ஊழிய நிர்வாகக் குழு உறுப்பினர்களாக 3 பேரும், ஒருங்கிணைப்பாளராக ஒருவரும், 20 பிராந்திய தலைவர்களும்,71 மண்டல ஒருங்கிணைப்பாளர்களுமாக இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.